19 நாட்கள் வயதுடைய குழந்தை கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் தொடர்பாக அவரது தாய் சந்தேகத்தின் பேரில் கிரிஉல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நாரங்கமுவ, ஹமன்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பட்டதாரி மற்றும் தரவு ஆய்வாளர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில், பொறியியலாளரான கணவருடன் இந்த பட்டதாரி பெண் நல்ல குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு அவர் வீட்டிற்கு வந்திருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் தம்பதியினரும் குழந்தையும் வீட்டில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏதோ ஒரு சத்தம் கேட்டு கணவர் விழித்துப் பார்த்தபோது குழந்தை கிணற்றில் விழுந்திருந்தது என்றும், கிணற்றில் விழுந்ததாகக் கூறப்படும் மனைவி அங்கிருந்த ஒரு குழாயின் உதவியுடன் வெளியே வந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் 'வதூ கெய் சன்னிய' (பிரசவத்திற்குப் பிந்தைய மனநோய்) என்ற மனநிலைக்கு ஆளாகி இந்த பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்தாரா என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த தம்பதியினரிடையே எந்தவித சண்டையோ அல்லது மோதலோ ஒருபோதும் பதிவாகவில்லை என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது ஒரு சிறப்பம்சமாகும்.