பிரதமர் ஹரினி சுவிட்சர்லாந்திற்கு

prime-minister-harini-to-switzerland

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அம்மையார், சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸில் நடைபெறும் 56வது உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று (19) நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார்.




இந்த மாநாடு இன்று (19) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸில் நடைபெறும் என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

'A Spirit of Dialogue' (உரையாடலின் ஒரு ஆவி) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில், அரச தலைவர்கள், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் உட்பட 3,000 இற்கும் அதிகமான உலகளாவிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




தனது பயணத்தின் போது, பிரதமர் சர்வதேச தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்களுடன் பல உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

gossiplanka image

Post a Comment

Previous Post Next Post