நுகேகொட, கொஹுவளை, தெஹிவளை, மொரட்டுவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை (03) 24 மணிநேர நீர் வெட்டு

24-hour-water-cut-to-several-areas-including-nugegoda-kohuwala-dehiwala-moratuwa-tomorrow-03

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த சில பிரதேசங்களுக்கு நாளை (03) இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது.




இந்த நடவடிக்கையுடன் நுகேகொடை, கொஹுவளை, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுர, அங்குலானை, இதிபெத்த, கட்டுபெத்த, கல்தெமுல்ல, மோதர, கொரலவெல்ல, எகொடஉயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் முழுமையாக இடைநிறுத்தப்படும்.

மேலும், சேத்சிறிபாய, ஹிம்புட்டான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கி சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹேவ்லாக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வட்ட வீதி, ஜயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய நுகர்வோர் பகுதிகளுக்கும் இந்த நீர் வெட்டு பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், குறித்த காலப்பகுதியில் முடிந்தவரை சிக்கனமாக நீரைப் பயன்படுத்துமாறு நுகர்வோரிடம் மேலும் கேட்டுக்கொள்கிறது.

Post a Comment

Previous Post Next Post