15 நிறுவனங்களின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள சேவைகளில் மின்சாரம், பெற்றோலியப் பொருட்கள், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகித்தல், அத்துடன் வைத்தியசாலைகள், நீர் விநியோகம், பொதுப் போக்குவரத்து சேவைகள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், அம்புலன்ஸ் சேவைகள், மத்திய வங்கி மற்றும் அனைத்து அரச வங்கிகள், காப்புறுதி சேவைகள், நீர்ப்பாசனம் தொடர்பான சேவைகள் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த 15 சேவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.மின்சாரம் வழங்குவது தொடர்பான அனைத்து சேவைகளும்
2.பெற்றோலியப் பொருட்கள், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகித்தல்
3. வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளைப் பராமரித்தல் மற்றும் அனுமதித்தல், கவனித்தல், போஷித்தல் மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பான தேவையான அல்லது செய்யப்பட வேண்டிய எந்தவொரு விளக்கத்தின் அனைத்து சேவைகள், வேலைகள் அல்லது உழைப்பு
4. பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள்
5.வீதிகள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே பாதைகள் உட்பட, வீதிகள், ரயில்வே அல்லது விமானம் மூலம் போக்குவரத்து சேவைகள், சுற்றுலா சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல்
6.நீர் விநியோகம் மற்றும் வடிகால் தொடர்பான அனைத்து சேவைகளும்
7.உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும்
8.அனைத்து மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், முன்னாள் இலங்கை மத்திய குழு உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கள மட்ட உத்தியோகத்தர்களால் செய்யப்பட வேண்டிய அல்லது செய்யப்பட அவசியமான எந்தவொரு தன்மையிலான அனைத்து சேவைகள், வேலைகள் அல்லது உழைப்புப் பங்களிப்பு.
9.அம்புலன்ஸ் சேவைகள்
10. இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை நடவடிக்கைகள்.
11. நீர் விநியோகம், மின்சாரம், வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்பு, தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் சேவை, (மலம் அகற்றுதல் மற்றும் அப்புறப்படுத்துதல் உட்பட) கழிவு சுத்திகரிப்பு மற்றும் குப்பைகளை அகற்றுவதற்காக ஏதேனும் ஒரு உள்ளூராட்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் ஏதேனும் ஒரு பணி மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும்
12. நீர்ப்பாசனம் தொடர்பான அனைத்து சேவைகளும்
13. தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகம் தொடர்பான அனைத்து சேவைகளும்
14. தாழ்நிலங்களை நிரப்புதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான அனைத்து சேவைகளும்
15. விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சேவைகள் தொடர்பான அனைத்து சேவைகளும்
Tags:
Trending