ஹசலக, மினிபே பமுணுபுர பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 12க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்த நிலைமை குறித்து கருத்து தெரிவித்த கண்டி மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த, காணாமல் போனவர்களை தேடும் விசேட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.சில சடலங்கள் சதுப்பு நிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, புலத்கொஹுபிட்டிய, தேதுகல பிரதேசத்தில் அமைந்துள்ள பல வீடுகள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த அனர்த்தத்தில் சுமார் ஐந்து வீடுகள் மண்மேடுகளுக்குள் புதைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் ஜே.எம். ஹேரத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வீடுகளில் இருந்தவர்களும் இந்த நிலச்சரிவுடன் காணாமல் போயுள்ளதாகவும், நிலவும் மோசமான வானிலை மற்றும் நிலப்பரப்பின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அந்த இடத்தை அடைவது தற்போது மிகவும் கடினமான பணியாக மாறியுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.
Tags:
Trending