இலங்கைக்கு கைகொடுக்க மோடியின் ‘சகர் பந்து’ நடவடிக்கை

gossiplanka image 1

 தித்வா சூறாவளியால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

X தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான குணமடைதலுக்காக நான் பிரார்த்தித்தேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு உதவுவதற்காக, சகர் பந்து நடவடிக்கை (Operation Sagar Bandhu) திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருட்களையும் அத்தியாவசிய நிவாரணக் குழுக்களையும் இந்திய அரசு விரைவாக அனுப்பியுள்ளதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நிலைமை மோசமடைந்தால் மேலும் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




‘அண்டை நாடு முதலில்’ என்ற கொள்கை மற்றும் ‘மகாசாகர்’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்தியா இலங்கையுடன் அத்தியாவசியமான இந்த நேரத்தில் நெருக்கமாகச் செயல்படுகிறது என்று இந்தியப் பிரதமர் குறிப்பிடுகிறார்.

gossiplanka image 2

Post a Comment

Previous Post Next Post