வரக்காப்பொல, துல்ஹிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள மொன்ரோவியா தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக இருபத்தொரு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோட்டத்தின் ஒரு பகுதி திடீரென மண்சரிவுக்கு உள்ளானதை அடுத்து இந்த அவசர அனர்த்த நிலை பதிவாகியுள்ளது.
இந்த அனர்த்தத்தில், தோட்டத்திலிருந்த ஆறு வீடுகள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டதுடன், அந்த வீடுகளில் தங்கியிருந்த பதினெட்டு பேர் மண்மேடுகளுக்குள் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
மேலும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மேலும் மூவர் துரதிர்ஷ்டவசமாக காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் மோசமான வானிலை மற்றும் நிலத்தின் உறுதியற்ற தன்மை காரணமாக, அனர்த்தம் ஏற்பட்ட இடத்தை அடைவது மீட்புக் குழுக்களுக்கு தற்போது மிகவும் கடினமாக உள்ளது. இருப்பினும், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட பிரிவினர் தொடர்ந்து முன்னெடுக்க முயற்சித்து வருகின்றனர்.
Tags:
News