மழை குழப்பங்களுக்கு மத்தியில் இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம்

67-magnitude-earthquake-strikes-indian-ocean-amid-heavy-rains
இந்தியப் பெருங்கடல் பகுதியில், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பிரதேசத்தை அண்மித்து, ரிக்டர் அளவுகோலில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று இன்று (27) காலை 10:26 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 25 கிலோமீட்டர் ஆழத்தில், வடக்கு அட்சரேகை 2.68 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 96.07 ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ளதாக தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் வெளியிட்ட தரவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க நிலைமையைக் கருத்தில் கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் இன்று காலை 10:43 மணிக்கு இலக்கம் 01 அறிவித்தலை வெளியிட்டு, தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இது 'வெள்ளை' நிறத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு ஆரம்ப தகவல் அறிவிப்பு என்பதால், இது தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.



Post a Comment

Previous Post Next Post