காலை 6 மணி நிலவரம் - பாதுக்க, ஹோமாகம, கடுவெல, கொலன்னாவ, களனி, எஹெலியகொட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே - பெரும் வெள்ளம்

6-am-update-padukka-homagama-kaduwela-kolonnawa-kelaniya-eheliyagoda-ruwanwella-seethawaka-dompe-major-floods

 களனி கங்கை வடிநிலத்தின் மேல் நீரோட்டப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (28) காலை 6.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலக்கம் 03 கொண்ட சிவப்பு நிற வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6.00 மணி வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.



தற்போது நிலவும் கடும் மழை காரணமாக களனி கங்கையின் மேல் நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதுடன், கங்கை நீர்மட்ட அளவீடுகளை பகுப்பாய்வு செய்யும் போது அடுத்த 48 மணி நேரத்தில் களனி கங்கை வடிநிலத்தின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.


குறிப்பாக எஹெலியகொட, நோர்வூட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவக்க, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த திடீர் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் சாரதிகளும் தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ள மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தவும் நிவாரணம் வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவிப்பு கீழே



Post a Comment

Previous Post Next Post