அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிவியா கிராமத்திற்கு அருகில் பாயும் கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர். நேற்று (27) இந்த விபத்து வீடியோவில் பதிவாகி இருந்த காட்சிகளைக் கண்ட பலர் அதிர்ச்சியடைந்தனர்.
விபத்துக்குள்ளான கார், குறித்த கால்வாய்க்கு அருகில் உள்ள வீதி வழியாக கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயன்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் சித்தி லெப்பை சபுர்தீன் (62), மொஹமட் தம்ப தஸ்மி மற்றும் மொஹமட் ஜரின் அசலா மெஹேவிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் உறவுமுறையில் தாத்தா, பாட்டி மற்றும் பேத்தி எனத் தெரிவிக்கப்பட்டது.
வீடியோ இங்கு கிளிக் செய்யவும்
Tags:
Trending


