நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூன்றாவது பிள்ளையான இவன், தனது மூத்த சகோதரி மற்றும் ஏனைய சகோதரர்களுடன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிறுவன் திடீரென குறுக்கு வீதியை நோக்கி ஓடியபோது, மில்டன் பெரேரா மாவத்தையிலிருந்து கலைமகள் வீதி வழியாக வந்த வேன் மோதியதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்தபோது குழந்தையின் உடலில் வெளிப்படையாக சிராய்ப்புக் காயங்கள் மட்டுமே காணப்பட்டாலும், குழந்தை இரத்தம் வாந்தி எடுத்ததால், உடனடியாக செயல்பட்ட வேன் சாரதி குழந்தையை கொழும்பு ரிட்ஜ்வே லேடி சிறுவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையின் 20 ஆம் இலக்க வார்டில் உள்ள விசேட சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 23 ஆம் திகதி தலலகலகே நிவென் மின்னாஸ் என்ற இந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வேனை ஓட்டிச் சென்ற கொழும்பு 15, மட்டக்குளி கதிரான பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பான சட்ட வைத்திய பரிசோதனைகள் மற்றும் பொலிஸ் விசாரணைகளில், விபத்து நடந்தபோது அவர் மதுபானம் அல்லது போதைப்பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.பி.எஸ். கல்யாணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் மஞ்சு பிரசன்ன மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (100009) அவிஷ்கா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
News