பாராளுமன்ற ஐ.டி. ஊழியருக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள்: வெளி விசாரணையில் அம்பலம்!

external-investigation-reveals-harassment-of-parliamentary-it-employee

பாராளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தில் பணிபுரியும் ஒரு பெண் அதிகாரிக்கு பல்வேறு அநீதிகளும் பாகுபாடுகளும் இழைக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா அழகப்பெரும அம்மையாரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.



இந்த விசாரணை அறிக்கை, குழுவின் தலைவரான முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா அழகப்பெரும அம்மையாரால் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் நேற்று (24) கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் ஒரு பெண் அதிகாரியால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே சபாநாயகரால் இந்த வெளி விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க இரண்டு உள்ளகக் குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், முறைப்பாட்டாளர் அந்தக் குழுக்களில் இருந்த அதிகாரிகளை நிராகரித்ததால், ஒரு வெளிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், பாராளுமன்றத்தின் வீட்டுப் பராமரிப்புத் திணைக்களத்தில் பணிபுரியும் பல பெண் ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய திணைக்களத்தின் ஓர் அதிகாரி உட்பட மூவரை சேவையிலிருந்து நீக்க பாராளுமன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post