பாராளுமன்றம் இன்றும் நாளையும் நள்ளிரவு 12 மணி வரை கூடுகிறது

parliament-to-remain-closed-until-12-midnight-today-and-tomorrow

 ஆறு அமைச்சுகளுக்கான செலவினத் தலைப்புகள் தொடர்பான விவாதங்கள் இன்றும் (1) நாளையும் (2) ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்றத்தில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்றும் நாளையும் காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது. வரவு செலவுத் திட்ட விவாத வரலாற்றில் இவ்வளவு நீண்ட நேரம் சபை கூடி விவாதங்கள் நடைபெறுவது இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இன்றைய தினம் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அத்துடன் சுற்றாடல் அமைச்சு ஆகிய அமைச்சுகளின் செலவினத் தலைப்புகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


அத்துடன், நாளைய தினம் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வரவு செலவுத் திட்ட விவாதங்களை நடத்த முடியவில்லை. அவ்வாறு இரத்து செய்யப்பட்ட இரண்டு நாட்களிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த செலவினத் தலைப்புகளை இன்றும் நாளையும் விவாதிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post