மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக, இன்று மாலத்தீவில் இருந்து டின் மீன் தொகுப்பு ஒன்று இலங்கைக்கு கிடைத்தது. இந்த தொகுப்பு 14 கொள்கலன்களில் 25,000 டின் டூனா மீன் பெட்டிகளைக் கொண்டுள்ளது.
இந்த உணவுப் பொருட்கள் மாலத்தீவின் உயர்ஸ்தானிகரால் கொழும்பில் முறையாக கையளிக்கப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கையளிக்கும் நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அனர்த்த முகாமைத்துவ மையத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் பிரிகேடியர் ரொஷான் தர்மவிக்ரம மற்றும் பிரதி கொமடோர் அருண விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags:
News