நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், நாட்டின் மீன் ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டுள்ள முன்னணி மீன் பதப்படுத்தும் நிலையங்கள் சுமார் பதினைந்து கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அண்மையில் சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள நிவா மது நதி மற்றும் ப்ளூ லைன் ஓசன் உள்ளிட்ட அனர்த்தத்திற்குள்ளான பல மீன் பதப்படுத்தும் நிலையங்களுக்கு விஜயம் செய்து பார்வையிட்டார்.
5 முதல் 6 அடி உயரம் வரை வெள்ளம் பெருக்கெடுத்ததால், இந்த தொழிற்சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், மின்சாரம் தடைப்பட்டதால் அங்குள்ள குளிர்பதன அமைப்புகளும் செயலிழந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மீன் உற்பத்திகளை ஏற்றுமதி செய்து நாட்டிற்கு பெரும் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த நிறுவனங்களை தொடர்ந்து நடத்துவதற்கு தேவையான மின்சாரத்தை விரைவாக வழங்குமாறு பிரதி அமைச்சர் மின்சார சபை மற்றும் லெக்கோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
Tags:
News