
இலங்கை ரூபாயின் பெறுமதி, இன்று (டிசம்பர் 16) திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், நாட்டின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 305.75 ஆகவும், விற்பனை விலை ரூ. 311 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.
NDB வங்கிக்கு அமைய, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 307.9 இலிருந்து ரூ. 308.1 ஆகவும், விற்பனை விலை ரூ. 312.4 இலிருந்து ரூ. 312.6 ஆகவும் முறையே அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 305.59 இலிருந்து ரூ. 305.94 ஆகவும், விற்பனை விலை ரூ. 312.33 இலிருந்து ரூ. 312.68 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 303.75 இலிருந்து ரூ. 303.99 ஆகவும், விற்பனை விலை ரூ. 312.25 இலிருந்து ரூ. 312.50 ஆகவும் முறையே அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கிக்கு அமைய, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 306 இலிருந்து ரூ. 306.25 ஆகவும், விற்பனை விலை ரூ. 312.50 இலிருந்து ரூ. 312.75 ஆகவும் அதிகரித்துள்ளது.