சுண்டிக்குளம் களப்பு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியின்போது காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் உயிரிழப்பு

all-5-naval-officers-who-went-missing-while-widening-the-chundikulam-lagoon-estuary-are-dead

 சுண்டிக்குளம் பிரதேசத்தில் களப்பு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் விசேட கடமையில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போன ஐந்து கடற்படை வீரர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று (30) பிற்பகல் சுண்டிக்குளம், சலாய் பிரதேசத்தை அண்மித்த பகுதியில் இந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது.



களப்பு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், குறித்த ஐந்து கடற்படை அதிகாரிகளும் திடீரென காணாமல் போயுள்ளனர்,


இது குறித்து தகவல் கிடைத்தவுடன் கடற்படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படை வீரர்கள் நால்வரின் சடலங்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன், பின்னர் காணாமல் போன ஐந்து வீரர்களும் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post