அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய இரவு, ஒரு தானியங்கி பண இயந்திரத்தை (ATM) திருட நடந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. திருடர்கள் திருடப்பட்ட SUV வாகனம் மற்றும் ஒரு உலோகக் கம்பி வடத்தைப் பயன்படுத்தி ATM இயந்திரத்தை கடையிலிருந்து வெளியே இழுக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஃபோர்ட் வொர்த் பகுதியில் உள்ள 7-Eleven கடையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது, சந்தேக நபர்கள் இருவர் கடையின் முன் கண்ணாடி கதவுகளை உடைத்து ATM இயந்திரத்தை வெளியே இழுத்துச் செல்லும் காட்சிகள் வைட் செட்டில்மென்ட் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன. புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவம், அண்மைய வாரங்களில் வடக்கு டெக்சாஸ் முழுவதும் பதிவான இதேபோன்ற குற்றச் செயல்களின் அலைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொள்ளையில் இருவர் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்கள் கருப்பு நிற ஆடைகளை அணிந்து முகமூடி அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் உலோக ஆயுதத்தால் கடையின் கதவுகளை உடைத்து, வாகனத்துடன் இணைக்கப்பட்டிருந்த கம்பி வடத்தை ATM இயந்திரத்துடன் கட்டியுள்ளார். இந்த செயலால் கடைக்கு பெரும் சேதம் ஏற்பட்டதுடன், கண்ணாடித் துண்டுகளும் பொருட்களும் கடைக்குள்ளும் வாகன நிறுத்துமிடத்திலும் சிதறிக் கிடந்ததை அதிகாரிகள் அவதானித்தனர்.
சந்தேக நபர்கள் இரண்டு முறை முயற்சி செய்த பிறகு ATM இயந்திரத்தை கடையிலிருந்து வெளியே இழுக்க முடிந்தது, ஆனால் அவர்கள் தப்பிச் செல்லும் போது இயந்திரம் வாகனத்திலிருந்து கழன்று வழியில் விழுந்துள்ளது. பின்னர் பொலிஸார் அந்த ATM இயந்திரத்தைக் கண்டுபிடித்தனர். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கருப்பு நிற SUV வாகனம் டல்லஸ் நகரத்திலிருந்து திருடப்பட்டது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது, மேலும் நகரத்தில் நிறுவப்பட்ட கேமரா அமைப்புகள் மற்றும் வாகன எண் தகடு வாசிப்பான்கள் (license plate readers) உதவியுடன், கடைக்கு அருகில், அரை மைல் தொலைவில் அந்த வாகனத்தை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது.
சம்பந்தப்பட்ட வீடியோஇங்கே கிளிக் செய்யவும்