மின்சாரத் துறை சீர்திருத்தத்திற்கு ADB இலிருந்து 100 மில்லியன் டாலர்கள்

adb-allocates-100-million-for-power-sector-reform

 இலங்கையின் மின்சாரத் துறையைச் சீர்திருத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொள்கைக் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது.



ஆசிய அபிவிருத்தி வங்கியின் எரிசக்தித் துறை சீர்திருத்தப் பொதியின் இரண்டாம் கட்டத்தை விரைவுபடுத்துவதே இந்த நிதியுதவியின் முக்கிய நோக்கமாகும். இதில் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதில் விசேட கவனம் செலுத்தப்படும்.




2024 மின்சாரச் சட்டம் மற்றும் அதன் 2025 திருத்தத்திற்கு இணங்க இந்த மறுசீரமைப்பு இடம்பெறும். இதன் கீழ், மின் உற்பத்தி, பரிமாற்றம், அமைப்புச் செயற்பாடுகள் மற்றும் விநியோகத்திற்குப் பொறுப்பான பல சுயாதீனமான தொடர்ச்சியான நிறுவனங்களாக இலங்கை மின்சார சபை பிரிக்கப்பட்டு நிறுவப்படவுள்ளது.

முழு மின்சாரத் துறையின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, செலவு அடிப்படையிலான மின் கட்டண முறையை பராமரிப்பதற்கும், இலங்கை மின்சார சபைக்கான விரிவான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் ஆதரவளிக்கும்.

நிறுவப்படும் புதிய தொடர்ச்சியான நிறுவனங்களுக்கிடையில் தற்போதுள்ள கடன்களை வெளிப்படைத்தன்மையுடன் விநியோகிப்பதற்கும், அந்த நிறுவனங்களின் நிதித் திறனையும் கடன் தகுதியையும் மேம்படுத்துவதன் மூலம் மிகவும் நிலையான அடிப்படையில் செயற்படுவதற்கு இடமளிப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டுகிறது.

இந்தக் கடனுக்கு மேலதிகமாக, 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொழில்நுட்ப உதவி மானியத்தையும் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மானியம், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும், புதிய நிறுவனங்களின் திறனை வளர்ப்பதற்கும், அவற்றின் வணிக மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கு உதவுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post