
நொரோச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டு, மேலும் ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்படுத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. தனிப்பட்ட தகராறு முற்றியதால் இந்த குற்றம் நடந்துள்ளது என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று டிசம்பர் 03ஆம் திகதி இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவரும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் குறிப்பிடும் தகவலின்படி, இவ்வாறு உயிரிழந்தவர்கள் நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், 35 வயதுடைய பெண் ஒருவருமாவர். சம்பவத்தில் காயமடைந்த மற்றைய பெண் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 23 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரான அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நொரோச்சோலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
News