தெஹிவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஏ குவாட்டர்ஸ் (A Quarters) விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சனிக்கிழமை (06) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரவு 8.00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 34 வயதுடைய நபர், சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அல்லது கொலைக்கான உடனடி காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தெஹிவளை பொலிஸ் நிலையம் முன்னின்று செயற்பட்டு வருவதுடன், மேலும் பல பொலிஸ் குழுக்கள் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
Tags:
Trending