
அனர்த்த நிலைமைகள் காரணமாக வீடுகளை இழந்த, தற்போது பாதுகாப்பு முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் மாதாந்தம் இருபத்தைந்தாயிரம் ரூபா வாடகை கொடுப்பனவை வழங்க தீர்மானித்ததை அடுத்து, சில வீட்டு உரிமையாளர்கள் நியாயமற்ற முறையில் வீட்டு வாடகைக் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக
இடப்பெயர்ந்த குடும்பங்களின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சந்தர்ப்பவாத நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்டன், அண்மையில் ஜனாதிபதியின் தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த நிலைமை கடுமையாக விவாதிக்கப்பட்டது.குறிப்பாக, இந்த இடப்பெயர்ந்த மக்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது, வீட்டு உரிமையாளர்கள் குறைந்தபட்சம் மூன்று மாத முற்பணத்தைக் கோருவது ஒரு முக்கிய தடையாக மாறியுள்ளதாகவும், கொத்மலை போன்ற பகுதிகளில் சில நபர்கள் இந்த தேசிய அனர்த்தத்தை தங்களுக்கு சாதகமான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி வீட்டு வாடகையை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அங்கு தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், வலப்பனைப் பிரதேசத்தில் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் கண்டி நகரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்கள், முன்னர் இருபத்தைந்தாயிரம் ரூபாவுக்கும் குறைவான தொகைக்கு அப்பிரதேசத்தில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த வீடுகளுக்கு தற்போது சில தரப்பினர் முப்பத்தைந்தாயிரம் ரூபா வரை கோரும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், 1987 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இழப்பீடுகளைப் பெற்றுக்கொண்டு அந்த இடங்களிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அதே ஆபத்தான இடங்களில் குடியேறி மீண்டும் இழப்பீடுகளைப் பெற முயற்சிக்கும் ஒரு போக்கு இருப்பதாகவும், இந்த பிரச்சினை நிரந்தரமானது என்பதால், அதைத் தடுக்க தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இந்த நெருக்கடி ஒருபோதும் தீர்க்கப்படாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் வலியுறுத்தினார்.
Tags:
News