மீண்டும் திறக்கப்பட்ட ஹட்டன் - கொழும்பு வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு!

police-issue-notice-to-drivers-travelling-on-the-reopened-hatton-colombo-road

 நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவுகளினால் தடைப்பட்டிருந்த ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள், மண்சரிவுகள் ஏற்பட்ட இடங்களுக்கு அருகில் எந்தவொரு காரணத்திற்காகவும் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் விசேட அறிவிப்பு விடுத்துள்ளனர்.



அந்த இடங்களில் மேலும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகனங்களை நிறுத்துவதும், அந்த இடங்கள் வழியாக நடந்து செல்வதும் ஆபத்தானது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.


இதற்கிடையில், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி வழியாக நுவரெலியா மற்றும் நாவலப்பிட்டி வரையிலான வீதியும் வாகனப் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதியில் கல் போக்வ பிரதேசத்தில் சேதமடைந்த பகுதி சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இருப்பினும், கம்பளை - நுவரெலியா பிரதான வீதி மற்றும் கொத்மலை, வலப்பனை பிரதேசங்களுக்குச் செல்லும் வீதிகள் இன்னும் வாகனப் போக்குவரத்துக்காக திறக்கப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post