ஹொரணை, வவுலகல தொழிற்பேட்டையில் அமைந்துள்ள டயர் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (29) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரப்பர் சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ தற்போது வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்த ஹொரணை நகர சபையின் தீயணைப்புப் பிரிவு, பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இருப்பினும், அருகிலுள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கும் தீ பரவும் அபாயம் உள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தீயை அணைக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் தீவிரம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.