ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு புதிய நிர்வாக சபை நியமனம்

a-new-governing-body-for-the-university-of-sri-jayewardenepura

 ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய நிர்வாக சபை ஒன்றை நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பதினான்கு நிபுணர்களைக் கொண்ட இந்த புதிய நிர்வாக சபை அமைக்கப்பட்டுள்ளது.



அந்த புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக ஹேமாஸ் மருத்துவமனையின் தலைவர் முடாசா ஏ.எச். ஈசுஃபலி, கொமர்ஷல் வங்கியின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் இசுரு திலகவர்தன, ஜோன்கீல்ஸ் நிறுவனத்தின் மனித வளத் தலைவர் (நுகர்வோர் உணவு) இமானி பெரேரா மற்றும் அன்டோஸ் கொக்கோவா நிறுவனத்தின் குழுப் பணிப்பாளர் வஜிரா குமாரி ஹாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வி.வி. கருணாரத்ன நிறுவனத்தின் முகாமையாளர் பொறியியலாளர் எம்.எம்.எஸ். மொரேமடே, ரெஜென் ரினெவபல் நிறுவனத்தின் பிரதம பொறியியலாளர் பிரியந்த அபேசிங்க மற்றும் கொமர்ஷல் வங்கியின் முன்னாள் பிரதம நிதி அதிகாரி நந்திக புத்திபால ஆகிய தொழில் வல்லுநர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.




அரச சேவையிலும் உயர்கல்வித் துறையிலும் அனுபவம் வாய்ந்த அறிஞர்களான முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறையின் கௌரவப் பேராசிரியர் எஸ்.பி. தெரணியகல ஆகியோரும் புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கின்றனர். தேசிய ஒலிம்பிக் குழுவின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் பி.எல்.எச். பெரேரா, சி.ஈ.எஃப்.ஈ. இலங்கை நிறுவனத்தின் தலைவர் காமினி பண்டா ஹேரத், ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசியப் பிராந்திய போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் கலாநிதி அனுஷா அபேவிக்ரம மற்றும் சட்டத்தரணி கோட்டாபய திசாநாயக்க ஆகியோரும் நிர்வாக சபையின் ஏனைய உறுப்பினர்களாகச் செயற்படுவார்கள்.

ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரால் 1873 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புகழ்பெற்ற வித்யோதய பிரிவெனாவை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த பல்கலைக்கழகம், 1959 ஆம் ஆண்டில் சுதந்திர இலங்கையின் முதல் பல்கலைக்கழகமாக மாறிய ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post