நாரஹேன்பிட்டி தேசிய இரத்த வங்கி வளாகத்திற்கு இரத்தம் தானம் செய்ய வந்த பெருமளவிலான மக்கள் வரிசைகளில் காத்திருந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரத்தம் தானம் செய்வதற்காக மூவாயிரத்திற்கும் அதிகமான நன்கொடையாளர்கள் ஏற்கனவே வரிசைகளில் காத்திருப்பதால்,
புதிய நன்கொடையாளர்களை தற்காலிகமாக இணைத்துக்கொள்வதை நிறுத்த தேசிய இரத்த மையம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பாக விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அந்த மையம், நேற்று பெருமளவிலான மக்கள் இரத்தம் தானம் செய்ய வந்ததாகவும், அவர்களுக்கு நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்க நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வந்துள்ள 3000க்கும் அதிகமானோரின் இரத்த தான செயல்முறையை நிறைவு செய்ய குறைந்தபட்சம் இரவு 10.00 மணி வரை ஆகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த எதிர்பாராத நெரிசல் காரணமாக சேவைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதால், நாரஹேன்பிட்டி மையத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு இரத்த வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Tags:
News