கும்புகன பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்குக்கு மத்தியில் பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து மொணராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில், குறித்த பஸ்ஸின் உரிமையாளர் மற்றும் சாரதி, நடத்துனர் உட்பட ஊழியர்கள் கடந்த புதன்கிழமை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிப்பட்ட உண்மைகள் மற்றும் அவர்களின் பொறுப்பற்ற நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில், குறித்த பஸ்ஸின் வழி அனுமதிப்பத்திரத்தை இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்த ஆணைக்குழு தீர்மானித்தது.
மேலும், பயணிகளின் பாதுகாப்பைப் புறக்கணித்து செயல்பட்ட குற்றச்சாட்டின் பேரில், குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனருக்கு தண்டனை வழங்கி, அவர்களின் சேவையை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
Tags:
News