
சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலிகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 25 வயதுடைய இந்தியர் என்றும், அவர் இந்தியாவில் ஹோட்டல் ஊழியராகப் பணிபுரிபவர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று (30) அதிகாலை 02.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இந்த பயணியின் மீது சந்தேகம் கொண்ட விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் அவரைச் சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகநபர் அணிந்திருந்த மேலங்கிக்குள் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 கிராம் எடையுள்ள 05 தங்கச் சங்கிலிகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தற்போது மேற்கொண்டு வருகிறது.
Tags:
News