இன்று (02) வனாத்தவில்லு, லாக்டோவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் தகன உலை ஒன்றில், வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்து அழிக்கப்படவிருந்த 170 கிலோகிராம் ஹெரோயின் அழிக்கப்பட்டது.
இந்த போதைப்பொருள் தொகை கொழும்பு பிரதான நீதவான் அசங்க.எஸ். போதரகம அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் அழிக்கப்பட்டது.
அதற்கு முன்னர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இந்த ஹெரோயின் போதைப்பொருள் தொகை அழிப்பதற்காக இன்று காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன், இந்த போதைப்பொருள் தொகை வனாத்தவில்லு, லாக்டோவத்த பொலிஸ் தகன உலைக்கு கொண்டு செல்லப்பட்டு முழுமையாக அழிக்கப்பட்டது.