சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த 237 பறவைகளுடன் கூடிய ஒரு டிங்கி படகு மற்றும் அதனுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (14) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது யாழ்ப்பாணம் கச்சத்தீவு தீவை அண்மித்த கடல் பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இடம்பெற்றது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 41 வயதுக்குட்பட்ட யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவின் குடியிருப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பறவைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக டெல்ஃப்ட் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.