வாகன இலக்கத் தகடுகளைத் தயாரித்த ஆக்சஸ் நிறுவனத்தின் 25 வருட ஏகபோகம் South Asian Technologies நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

access-companys-25-year-monopoly-on-vehicle-number-plates-has-been-changed-to-south-asian-technologies

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிப்படுத்தும் வகையில், அடுத்த ஐந்து வருட காலப்பகுதிக்கு வாகன இலக்கத் தகடுகளை அச்சிட்டு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய போட்டித்தன்மை வாய்ந்த கொள்முதல் முறைமையின் கீழ் இதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டதோடு, நான்கு நிறுவனங்கள் கேள்விப்பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளன.




சமர்ப்பிக்கப்பட்ட கேள்விப்பத்திரங்களை ஆராய்ந்த பின்னர், உயர் மட்ட நிலையான கொள்வனவுக் குழு மற்றும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபை ஆகியவற்றால் வழங்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு பொருத்தமான நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, M/s South Asian Technologies (Pvt) Ltd நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 05 வருட காலப்பகுதிக்கு செல்லுபடியாகும் என்பதுடன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் வாகனப் பதிவு மற்றும் இலக்கத் தகடுகளை வழங்கும் போது மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு இயலுமை கிடைக்கும். 2000 ஆம் ஆண்டு முதல் 25 வருடங்களாக இந்த வேலையை 'Access' என்ற ஒரே நிறுவனம் செய்து வந்ததால் சில சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. 2000 ஆம் ஆண்டு முதல் ஒரே ஒரு நிறுவனம் இந்த கேள்விப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டதுடன், 2008 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான கேள்விப்பத்திரமும் அதே நிறுவனத்திற்கே புதுப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை புதிய கேள்விப்பத்திரத்திற்காக 04 நிறுவனங்கள் முன்வந்திருந்தன, அவற்றில் முன்னர் குறிப்பிட்ட நிறுவனமே தெரிவு செய்யப்பட்டது.




முன்னர் இலக்கத் தகடுகளை வழங்கிய Access நிறுவனம் ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேன்முறையீடு செய்திருந்த போதிலும், புதிய கேள்விப்பத்திரம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

Post a Comment

Previous Post Next Post