தென் கடற்பரப்பில் 296 கிலோ போதைப்பொருளுடன் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

11-suspects-were-caught-with-296-kg-of-drugs-from-the-southern-coast

பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த விசேட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் பணியகமும் இலங்கை கடற்படையும் இணைந்து தென் கடற்பரப்பில் மேற்கொண்ட வெற்றிகரமான கூட்டு நடவடிக்கையின் பின்னர், பாரியளவிலான போதைப்பொருள் தொகையை கடத்திச் சென்ற இரண்டு பலநாள் மீன்பிடிப் படகுகளுடன் பதினொரு சந்தேகநபர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். கடற்படைக்குச் சொந்தமான நீண்ட தூர கண்காணிப்புக் கப்பல்களைப் பயன்படுத்தி ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகள் அவதானிக்கப்பட்டதுடன், அவற்றில் ஒரு படகில் இருந்த ஐவரும் மற்றைய படகில் இருந்த அறுவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.




கைது செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சந்தேகநபர்களையும் இன்று (25) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வந்த பின்னர், பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 14 பைகளில் அடைக்கப்பட்டிருந்த 270 போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த போதைப்பொருள் தொகையை பரிசோதித்த போது, 184 கிலோ 528 கிராம் ஹெரோயினும், 112 கிலோ 268 கிராம் ஐஸ் போதைப்பொருளும் இருந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 முதல் 50 வயதுக்குட்பட்ட அம்பலாந்தோட்டை, கொஸ்வத்தை மற்றும் பேருவளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து ஒரு தொகுதி தொடர்பாடல் உபகரணங்களும் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களும் வழக்கு பொருட்களும் இன்று (25) புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சந்தேகநபர்களை 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான தடுப்புக் காவற் உத்தரவுகளைப் பெறுவதற்கு பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

11-suspects-were-caught-with-296-kg-of-drugs-from-the-southern-coast

11-suspects-were-caught-with-296-kg-of-drugs-from-the-southern-coast

11-suspects-were-caught-with-296-kg-of-drugs-from-the-southern-coast

11-suspects-were-caught-with-296-kg-of-drugs-from-the-southern-coast

Post a Comment

Previous Post Next Post