ஹட்டன் நகரில் அலைந்து திரியும் பிச்சைக்காரர்களை ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் (25) ஆம் திகதி கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளனர்.
ஹட்டன் சமூகப் பொலிஸ் பிரிவு, ஹட்டன் டிக்கோயா லெதண்டி சமூகப் பொலிஸ் பிரிவுடன் இணைந்த 'ஏழைகளின் நண்பன்' அமைப்பின் இளைஞர்களுடன் இணைந்து, பிச்சைக்காரர்களின் தலைமுடி மற்றும் தாடியை வெட்டி, வெந்நீரில் குளிப்பாட்டி, புதிய ஆடைகளை வழங்கி, அவர்களுக்கு மதிய உணவையும் வழங்கியுள்ளது.
ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் அறிவுறுத்தலின் பேரில், ஹட்டன் தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுந்தர் ராஜ் ஆகியோர் இந்த சேவையைச் செய்துள்ளனர்.
ஹட்டன் நகரில் அலைந்து திரியும் உரிமையாளர்கள் உள்ள பிச்சைக்காரர்களை நீதிமன்றத்தின் ஊடாக அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.