4 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் விமான பணிப்பெண் ஒருவர் கைது

katunayake-gold-smuggling

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், நான்கு கோடியே ஐம்பத்தொன்பது இலட்சத்து இருபத்தாறாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தேழு (4,59,26,957) ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற தனியார் விமான நிறுவனத்தின் இலங்கை விமானப் பணிப்பெண் ஒருவர் நேற்று (04) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.




அவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் பணிபுரிந்த விமானத்திலேயே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்ததாகவும், விமானப் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட வெளியேறும் வாயில் வழியாக வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒரு கிலோகிராம் 163 கிராம் எடையுள்ள இந்த நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்கள் அவர் கொண்டு வந்த பயணப் பையில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post