கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணப் பரிமாற்றத்திற்காக 4 நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள்

contracts-awarded-to-4-institutions-for-money-exchange-at-katunayake-airport

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்திற்குள் வெளிநாட்டு நாணய மாற்று சாளரங்களை நடத்துவதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக வருகை முனையத்தை மறுசீரமைக்கும் போது, முன்னர் சுங்க நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் நிறுவப்பட்டிருந்த பணப் பரிமாற்ற சாளரங்களை வேறு இடத்தில் இடமாற்றம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.




அவ்வாறு புதிதாக ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்த பணப் பரிமாற்ற சாளரங்களை அமைக்கும் போது பொருந்தக்கூடிய மாதாந்த வாடகை தொடர்பாக இணக்கப்பாட்டிற்கு வர முடியாமையின் காரணமாக, அதற்கு முன்னர் இருந்த ஒப்பந்தங்களை இடைநிறுத்த விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தது. அதன் பின்னர், வருகை முனையத்தில் புதிதாக ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியில் 03 வருட காலப்பகுதிக்காக வெளிநாட்டு நாணய மாற்று சாளரங்களை நடத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட போட்டித்தன்மை வாய்ந்த கேள்விப்பத்திர கோரல் முறைமையின் கீழ் கேள்விப்பத்திரங்கள் கோர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதற்கமைய சமர்ப்பிக்கப்பட்ட 05 கேள்விப்பத்திரங்கள் தொடர்பாக உயர் மட்ட நிரந்தர கொள்முதல் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இந்த புதிய அனுமதிக்கு அமைய சாளர இலக்கம் 04 ஐ நடத்துவதற்காக 972.77 மில்லியன் ரூபாய்கள் மற்றும் தொடர்புடைய வரிகள் அடங்கிய தொகைக்கு கொமர்ஷல் வங்கி (Commercial Bank of Ceylon PLC) க்கும், சாளர இலக்கம் 05 இற்காக 877.14 மில்லியன் ரூபாய்கள் மற்றும் தொடர்புடைய வரிகள் அடங்கிய தொகைக்கு இலங்கை வங்கி (Bank of Ceylon) க்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.




மேலும், சாளர இலக்கம் 06 ஐ நடத்துவதற்காக 720.79 மில்லியன் ரூபாய்கள் மற்றும் தொடர்புடைய வரிகள் அடங்கிய தொகைக்கு தோமஸ் குக் லங்கா (Thomas Cook Lanka (Pvt) Limited) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சாளர இலக்கம் 07 இற்காக 646.64 மில்லியன் ரூபாய்கள் மற்றும் தொடர்புடைய வரிகள் அடங்கிய தொகைக்கு சம்பத் வங்கி (Sampath Bank PLC) க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக சாளர இலக்கம் 08 இற்காக 631.61 மில்லியன் ரூபாய்கள் மற்றும் தொடர்புடைய வரிகள் அடங்கிய தொகைக்கு மக்கள் வங்கி (People's Bank) க்கும் 03 வருட காலப்பகுதிக்காக இந்த ஒப்பந்தங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post