
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடருக்காக இலங்கை பொலிஸாரால் விசேட போக்குவரத்து திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்து திட்டம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22, 24, மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
போட்டிகள் நடைபெறும் நாட்களில், நண்பகல் 12.00 மணி முதல் போட்டி முடியும் வரை, மைதானத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளும் பொதுமக்களும் கோரப்படுகிறார்கள்.
அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் வீதிகளாக பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, டெம்பிள் வீதி (கட்டாரம மாவத்தை), 100 அடி வீதி, போதிராஜ வீதி, வின்சென்ட் பெரேரா வீதி மற்றும் கலாநிதி பிரிட்டோ பாபுபுல்லே பிரதேசம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த வீதிகள் எதுவும் மூடப்படவோ அல்லது போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படவோ மாட்டாது என்றும், வழமையான போக்குவரத்து ஓட்டம் அப்படியே பேணப்படும் என்றும் இலங்கை பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.