கொழும்பு, ஜின்னுப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கரையோரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரு சிறுவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 44 வயதுடையவர். முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, மேலும் பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.