கொட்டாவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஸ கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த ஒரு வெளிநாட்டவர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, கொட்டாவில பொலிஸ் உயிர் காப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஜனவரி மாதம் 11ஆம் திகதி நண்பகல் வேளையில் பதிவாகியுள்ளது.
குறித்த வெளிநாட்டவர் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரோட்டத்தில் சிக்கியதால் இவ்வாறு ஆபத்தில் சிக்கியுள்ளார். அந்த நேரத்தில் கடற்கரையில் உயிர் காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டுள்ளனர். கொட்டாவில பொலிஸ் உயிர் காப்புப் பிரிவில் இணைக்கப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் மெண்டிஸ், பொலிஸ் சார்ஜன்ட் (59416) அஜந்தா, பொலிஸ் கான்ஸ்டபிள் (96986) திசாநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (105268) கஹவத்த ஆகிய அதிகாரிகள் இணைந்து வெளிநாட்டவரை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டவர் 65 வயதுடைய இங்கிலாந்து நாட்டவர் ஆவார்.