இன்று காலை எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய, கொஸ்வத்து மானான முகவரியில் வசிக்கும் 83 வயதுடைய எச்.ஏ.
அசோக குலரத்ன என்ற தந்தை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, 83 வயதான இந்த தந்தை சிறுநீரகப் பிரச்சனை காரணமாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் முதல் வார்டில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் அவர் குணமடைந்து, வைத்தியசாலையில் இருந்து வெளியேற அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்ததுடன்,
குடும்ப உறுப்பினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வரும் வரை வைத்தியசாலையில் தங்கியிருந்தார். இன்று காலை அவர் வைத்தியசாலை வார்டின் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.