இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 'வராஹா' (ICGS Varaha) மற்றும் 'அதுல்யா' (ICGS Atulya) ஆகிய இரண்டு கப்பல்களும் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன. அங்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய அக்கப்பல்களை மிகவும் அன்புடன் வரவேற்றனர்.
96.2 மீட்டர் நீளமுள்ள 'வராஹா' கப்பல், நாட்டின் கடல் எல்லைகளை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த கப்பலாகும். அதன் கட்டளை அதிகாரியாக கமாண்டன்ட் அஸ்வினி குமார் பணியாற்றுகிறார். 50 மீட்டர் நீளமுள்ள அதிவேக ரோந்துக் கப்பலான 'அதுல்யா' கமாண்டன்ட் அனிட் குமார் மிஸ்ராவின் கட்டளையின் கீழ் நாட்டிற்கு வந்துள்ளது.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய கடலோர காவல்படை கப்பல் பணியாளர்கள் இலங்கை கடலோர காவல்படையுடன் இணைந்து ஒரு தொடர் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளனர். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.