புதிய கல்விச் சீர்திருத்தங்களை விலக்கிக் கொள்ளுமாறும், ஹரினி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரி, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவினர் இசுருபாய கல்வி அமைச்சகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்திருந்தனர். விமல் வீரவன்ச மாலை வரை அங்கேயே தங்கியிருந்தார். இருப்பினும், மாலை முடிந்து இரவு தொடங்கியதும், விமல் வீரவன்ச அங்கிருந்து புறப்பட்டார்.
அதன்பின்னர், மேடையில் ஒரு சிறிய குழுவினர் தங்கியிருந்த காட்சி கமெராவில் பதிவாகியது.இந்த எதிர்ப்பு 'தொடர்ச்சியான சத்தியாக்கிரகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது 'உண்ணாவிரதம்' அல்ல என்றும், தான் அங்கிருந்து சென்ற பிறகு மற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்றும் இன்று (12) நண்பகல் விமல் தங்கியிருந்தபோது ஊடக புகைப்படக் கலைஞர்கள் கேட்ட கேள்விக்கு அவர் தெரிவித்திருந்தார்.
தாம் உள்ளிட்ட குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது சத்தியாக்கிரகமே தவிர உண்ணாவிரதம் அல்ல என்றும், உண்ணாவிரதமும் சத்தியாக்கிரகமும் ஒன்றல்ல, இரண்டு வெவ்வேறு விடயங்கள் என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்தினார்.
2010 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் கவனத்தை ஈர்க்க விமல் வீரவன்ச உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அந்த உண்ணாவிரதம் உணவு உட்கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த சத்தியாக்கிரகம் அத்தகையது அல்ல, மாறாக போதுமான காலம் வரை பல்வேறு நபர்களைப் பயன்படுத்தி அதைத் தொடரும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது என்பதை இது காட்டுகிறது.