கெழனி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டு அணை உடைப்பெடுக்கும் கடும் அச்சுறுத்தல் தற்போது உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர அபாய நிலை குறித்து இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலைமை காரணமாக, அம்பத்தலே அணைக்கும் மாலபே - கடுவெல பிரதான வீதிக்கும் இடையில் அமைந்துள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:
News