நுගේகொடவிலிருந்து கொஹுவல நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது டிசம்பர் 22 அன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் களுபோவில மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் உயிரிழக்கும்போது அவருக்கு 21 வயது.
துப்பாக்கிச் சூட்டில் அவரது வலது கை மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞன் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான அவிஷ்கா என்பவரின் நெருங்கிய நண்பர் என பொலிஸார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். மேலும், அவர் அவிஷ்காவின் நிதி விவகாரங்களை கையாளுபவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த துப்பாக்கிச் சூடு மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரரான பதோவிட்ட அசாங்காவின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல் பதோவிட்ட அசாங்காவின் உத்தரவின் பேரில் திட்டமிடப்பட்டு 'சாண்டோ' என்ற நபரால் செயல்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள்இங்கே click here