சீ.ஐ.டி என கூறி சோதனை நடத்தி பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் ஒருவர் அத்திடியவில் கைது செய்யப்பட்டார்.

a-man-who-allegedly-abused-women-under-the-guise-of-cid-was-arrested-in-attidiya

 ரகசிய பொலிஸ் அதிகாரியாக நடித்து, வீதியில் செல்லும் இளம் பெண்களை சந்தேகத்திற்குரியவர்கள் என்று கூறி, பரிசோதனை செய்ய வேண்டும் என்று பலவந்தமாக தனது மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்து தப்பிச் சென்ற ஒருவரை அத்திடிய பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக  கல்கிசை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி, அவருக்கு சொந்தமான மோட்டார் வாகனத்துடன் கல்கிசை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.




கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார். அவர் கல்கிசை டெம்ப்ளர்ஸ் வீதியில் உள்ள ஒரு தங்குமிடத்தில் தற்காலிகமாக தங்கியிருந்து இவ்வாறான துஷ்பிரயோகங்களை செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான ஒரு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கடந்த பெப்ரவரி மாதம் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட வீதிகளில் உள்ள சி.சி.டி.வி. கமரா காட்சிகள் பரிசோதிக்கப்பட்டதுடன், கல்கிசை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி, பெண் உதவி பொலிஸ் பரிசோதகர் ரபிணி ராஜபக்ஷ அவர்களுக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகநபர் அத்திடிய பிரதேசத்தில் மோட்டார் வாகனத்துடன் கைது செய்ய முடிந்தது.

Post a Comment

Previous Post Next Post