வெலிகம, வலான மாவட்ட மருத்துவமனையின் பிரதம மருத்துவ அதிகாரியாக கடமையாற்றிய வைத்தியர் தேஜான் ஜயசேகர நேற்று (25) மாலை மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழக்கும் போது 49 வயதான வைத்தியர் ஜயசேகர, நீரில் மூழ்கிய பின்னர் அருகிலிருந்த பிரதேசவாசிகளால் உடனடியாக மீட்கப்பட்டு, அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் சிகிச்சைக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஸ பிரதேச கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது. வைத்தியர் ஜயசேகர வெலிகம வலான மருத்துவமனையில் தனது கடமைகளை ஆரம்பித்து சுமார் ஒரு மாதமே ஆகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக வெலிகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.