காலஞ்சென்ற கலாசூரி லதா வல்பொல அம்மையாரின் இறுதிக் கிரியைகளை முழு அரச அனுசரணையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பூதவுடல் இன்று (28) மாலை 4 மணி முதல் செவ்வாய்க்கிழமை (30) வரை பொரளை, ஜயரத்ன "ரெஸ்பெக்ட்" மலர்ச்சாலையில் வைக்கப்படவுள்ளது.
அதன் பின்னர், எதிர்வரும் புதன்கிழமை (31) அன்று மு.ப. 9 மணி முதல் பி.ப. 3 மணி வரையான காலப்பகுதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கும் அரச மரியாதையை செலுத்துவதற்கும் பூதவுடல் சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.
அவரது இறுதி விருப்பத்திற்கு அமைய, அன்றைய தினம் மாலை பொரளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறுதிக் கிரியைகள் முழு அரச அனுசரணையின் கீழ் நடைபெறும்.