கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற வர்ண பிரதானோற்சவத்தின் போது ஒரு மாணவிக்கு எதிர்பார்க்கப்பட்ட விருது கிடைக்காததை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சினால் அந்தப் பாடசாலையின் அதிபரை அழைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அவர்களின் அறிவித்தலுக்கு அமைய இசுருபாயவிற்கு வருகை தந்த அதிபர் சுமேதா ஜயவீர அவர்கள் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கும் போது பின்பற்றப்பட்ட முறைமை குறித்து இங்கு விளக்கமளித்துள்ளார்.ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், ஒரு பாடசாலை வீராங்கனைக்கு அவரது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் 'சிறந்த வீராங்கனை' என்ற விருதை வழங்கும் போது சில விசேட தீர்மானங்கள் கருத்தில் கொள்ளப்பட்டதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறந்த வீராங்கனையாக விருதுகளை வென்ற நபாஷி பெரேரா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரு சிறந்த நீச்சல் வீராங்கனை என்பதையும் அவர் அமைச்சு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தனிப்பட்ட பிரிவில் அகில இலங்கை முதல் இடத்தைப் பெறுதல், அகில இலங்கை சாதனை படைத்தல் மற்றும் சர்வதேசப் போட்டியில் அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றிருத்தல் உள்ளிட்ட பல விடயங்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை முன்கூட்டியே அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
பிரச்சினைக்கு மூல காரணமான ஸ்குவாஷ் வீராங்கனைக்கு சம்பந்தப்பட்ட பிரதான விருது கிடைக்காதது அதற்குத் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யாததாலேயே தவிர, ஒத்திகையில் கலந்துகொள்ளாததால் அல்ல என்றும், ஒத்திகைக்கு வராதவர்களுக்காக வர்ண மற்றும் விசேட விருது வழங்கப்பட்டதாகவும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சிறந்த வீராங்கனையாக விருதுகளை வென்ற நபாஷி பெரேரா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரு சிறந்த நீச்சல் வீராங்கனை என்பதையும் அவர் அமைச்சு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஸ்குவாஷ் வீராங்கனை தற்போது பாடசாலையின் பழைய மாணவி என்பதையும்,
விழாவின் போது நேரலையாக இடையூறு செய்து அவர் நடந்துகொண்ட விதம் மூலம் பாடசாலையின் நற்பெயருக்கு களங்கமும், எதிர்கால சந்ததியினருக்கு தவறான முன்மாதிரியும் ஏற்படுத்தியுள்ளதாக அதிபர் குற்றம் சாட்டுகிறார். விழாவிற்கு முன் இது குறித்து பெற்றோர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது எந்தவொரு பிரச்சினையும் எழுப்பப்படவில்லை என்பதையும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன அவர்கள் குறிப்பிட்டதாவது, அதிபரிடம் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.