நீதிமன்ற உத்தரவின் பேரில் துறைமுக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தெம்பிலி லஹிரு, டெங்கு நோய் தொற்றியதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது காய்ச்சல் நிலை மோசமடைந்ததால் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட பின்னர், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு டெங்கு நோய் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது தெம்பிலி லஹிரு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தார பத்மே உள்ளிட்ட குழுவினருடன் தெம்பிலி லஹிருவும் சிக்கினார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் பாதாள உலக குற்றங்கள் பல குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.