இன்று (1) இலங்கையில் அமெரிக்க டாலர் மதிப்பு

today-1-us-dollar-value-in-sri-lanka

இன்று (ஜனவரி 01) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா சற்று வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் மதிப்பு அதிகரிப்பைக் காட்டுகிறது.




செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூபா 306.75 ஆக மாறாமல் உள்ளதுடன், விற்பனை விலையும் ரூபா 312 ஆக மாறாமல் உள்ளது.

NDB வங்கிக்கு அமைய, ஒரு டொலரின் கொள்முதல் விலை ரூபா 308.75 இல் இருந்து ரூபா 308.25 ஆகவும், விற்பனை விலை ரூபா 313.25 இல் இருந்து ரூபா 312.75 ஆகவும் குறைந்துள்ளது.




மக்கள் வங்கி அறிவித்துள்ளபடி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூபா 306.53 இல் இருந்து ரூபா 306.04 ஆக குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலை ரூபா 313.29 இல் இருந்து ரூபா 312.79 ஆக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூபா 304.74 இல் இருந்து ரூபா 304.49 ஆகவும், ரூபா 313.25 இல் இருந்து ரூபா 313 ஆகவும் குறைந்துள்ளன.



சம்பத் வங்கிக்கு அமைய, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூபா 306.75 இல் இருந்து ரூபா 306.25 ஆக குறைந்துள்ளதுடன், விற்பனை விலை ரூபா 313.25 இல் இருந்து ரூபா 312.75 ஆக குறைந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post