டெரன ட்ரீம் ஸ்டார் சீசன் - 12 இன் கனவு நட்சத்திரமாக ஜனனி இமத்மா முடிசூட்டப்பட்டார்.
அது நேற்று (17) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியிலாகும்.
இதில் அனுபாமா குணதிலக்க இரண்டாம் இடத்தையும், பிரையன் ஹேங்ஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் நட்சத்திர அணிவகுப்பு - டெரன ட்ரீம்ஸ்டார் 12வது கட்டத்திற்காக தீவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து மூன்று திறமையானவர்கள், இறுதிப் போட்டியின் பிரமாண்டமான மேடையில் ட்ரீம்ஸ்டார் கிரீடத்திற்காக நேற்று இரவு போட்டியிட்டனர்.
நிபுணர்களின் நடுவர் குழுவின் தீர்ப்பு மற்றும் மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மூன்று இறுதிப் போட்டியாளர்கள் அனுபாமா குணதிலக்க, ஜனனி இமத்மா மற்றும் பிரையன் ஹேங்ஸ் ஆவர்.
பல வண்ணமயமான அம்சங்களைக் கொண்ட டெரன ட்ரீம் ஸ்டார் சீசன் - 12 இறுதிப் போட்டி மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றதுடன், அதைப் பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் திரண்டிருந்தனர்.